ஆலன் சினிமா விமர்சனம் : ஆலன் – பரிதாபம் | ரேட்டிங்: 2/5
நடிகர்கள் :
வெற்றி – தியாகு
மதுரா – ஜனனி தாமஸ்
அனு சிதாரா – தாமரை
விவேக் பிரசன்னா – பாக்கியநாதன்
அருவி மதன் – செல்வேந்திரன்
டிடோ வில்சன் – தனசேகரன்
ஸ்ரீ தேவா – ராகவன்
ஹரிஷ் பெரடி – ஆன்மிக குரு
கருணாகரன் – மேன்ஷன் ஓனர்
தொழில்நுட்பக் கலைஞர்கள் :
இயக்குநர் : சிவா ஆர்
எழுத்தாளர்கள் : சிவா ஆர்
ஒளிப்பதிவாளர் : விந்தன் ஸ்டாலின்
இசையமைப்பாளர் : மனோஜ் கிருஷ்ணா
படத்தொகுப்பாளர் : மு காசி விஸ்வநாதன்
தயாரிப்பு நிறுவனம் : 3எஸ் பிக்சர்ஸ் நிறுவனம்
தயாரிப்பாளர் : சிவா ஆர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
கதாநாயகன் தியாகுவின் (வெற்றி) வாழ்க்கைப் பயணத்தின் மூலம் தனிமை, அமைதி, தோழமை, மற்றும் இரக்கம் போன்ற பல்வேறு மனித உணர்வுகளை ஆலன் படம் ஆராய்கிறது. சிறு வயதில் தனது பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் சந்தோஷமாக இருந்து வந்த தியாகு, ஒரு விபத்தில் தனது பெற்றோரையும், நெருங்கிய உறவினர்களையும் இழக்க, அந்த சம்பவம் திரும்பத்திரும்ப நினைவில் வந்து மன அழுத்தத்தைத் தருகிறது. இதனால், மனவேதனையில் காசிக்கு ஓடிவிடுகிறார். அங்கு ஒரு ஆன்மீகவாதியாக வாழ முயலும் தியாகு கடந்த கால கெட்ட நிகழ்வால் அவதிப்படுவதால் அவரது மனம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ தடுக்கிறது. அப்போது ஆன்மீக குருவிடம் (ஹரிஷ் பெரடி) அரவணைப்பில் வளர்கிறார். இளம் வயதிலேயே தமிழ் இலக்கியத்தின் மீது நாட்டம் வளர்வதில் இருந்து கதை தொடங்குகிறது. ஆனால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அந்த சம்பவம் அவனுக்குள் இருக்கும் எழுத்துத் திறமையும் ஆன்மீகத்தை தொடர மறுக்கிறது. பத்து வருடங்களுக்குப் பிறகு தியாகுவின் குரு நீ ஆன்மீகவாதியாக இல்லாமல் சாதாரண மனிதனாக வாழ்ந்து நீ நேசிக்கும் எழுத்தின் மூலம் உள் அமைதியை அடைய வேண்டும் அதற்கு, எழுத்தாளர் ஆகும் லட்சியத்தில் ஈடுபடு என்று கூறுகிறார். சென்னைக்குச் வரும் தியாகுவுக்கு வழியில் தமிழ் மீது பற்று கொண்டு, தமிழ் கலாச்சாரங்களை ஆராய வரும் ஜெர்மன் நாட்டு பெண் ஜனனி தாமஸ் (மதுரா) அறிமுகம் கிடைக்கிறது. சென்னையில் இருவரும் சேர்ந்து நட்பாக பழக பின் காதலாக மாறுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிலையில், ஜனனி தாமஸ் பாண்டிச்சேரிக்கு தனிமையில் செல்லும் போது தியாகுவிடம், நான் சென்னை திரும்பி வரும் போது நீ எழுதும் கதையை நான் தான் முதலில் படிப்பேன் என்று கூறுகிறார். ஆனால் பாண்டிச்சேரியில் ஜனனி தாமஸ் கொல்லப்படுகிறார். இந்த துரதிஷ்ட சம்பவத்தால் மீண்டும் தியாகு மனமுடைந்து போகிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
அடர்த்தியான நீண்ட முடி, முகம் முழுக்க தாடியை என துறவி கதாபாத்திரத்திற்கு நடிகர் வெற்றி துளியும் பொருந்த வில்லை. சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் வெற்றி இம்முறை சற்று தடுமாறி உள்ளார்.
ஜனனி தாமஸ் கதாபாத்திரத்தில் மதுரா சிரித்த முகத்துடன் குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பு தந்துள்ளார்.
பின் பாதியில் தாமரை கதாபாத்திரத்தில் அனு சிதாரா தனது இருப்பை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்.
விவேக் பிரசன்னா (பாக்கியநாதன்), அருவி மதன் (செல்வேந்திரன்), டிடோ வில்சன் (தனசேகரன்), ஸ்ரீ தேவா (ராகவன்), ஹரிஷ் பெரடி (ஆன்மிக குரு), கருணாகரன் (மேன்ஷன் ஓனர்) உட்பட அனைவரும் பலவீனமான திரைக்கதை காரணமாக பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.
ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின், இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளர் மு காசி விஸ்வநாதன் ஆகியோர் முடிந்த அளவுக்கு திரைக்கதையை தொய்வில்லாமல் நகர உதவி உள்ளனர்.
15 வயதிலிருந்து 40 வயது வரைக்கும் நடக்கிற ஒரு எழுத்தாளருடைய பயோகிராபி கதைதான் ஆலன். திரைக்கதையில் போதுமான உணர்ச்சித் தொடர்புகள் இல்லாமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சிவா ஆர்.
மொத்தத்தில் 3எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சிவா ஆர் தயாரித்திருக்கும் ஆலன் – பரிதாபம்.