ரயில் சினிமா விமர்சனம் : ரயில் தடம் மாறாத உணர்ச்சிப் பயணம் | ரேட்டிங்: 2.5/5

0
258

ரயில் சினிமா விமர்சனம் : ரயில் தடம் மாறாத உணர்ச்சிப் பயணம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் :
முத்தையா – குங்குமராஜ் முத்துசாமி
செல்லமா – வைரமாலா
சுனில் – பர்வேஸ் மெஹ்ரூ
வரதன் – ரமேஷ்வைத்யா
ஹீரோயின் அப்பா – செந்தில் கோச்சடை
சுனில் மனைவி டிம்பிள் – ஷமீரா
சுனில் அப்பா – பிண்ட்டூ
சுனில் அம்மா – வந்தனா
குழந்தை – பேபி தனிஷா
திருப்புளி – சுபாஷ்
இன்ஸ்பெக்டர் – தங்கமணி பிரபு
மில் மேனேஜர் – ரமேஷ் யந்த்ரா
அக்கவுண்டண்ட் – சாம் டேனியல்
சுனில் ஃப்ரெண்ட் – ராஜேஷ்
கான்ஸ்டபிள் – ராமையா

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் : பாஸ்கர் சக்தி
ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்
படத்தொகுப்பு : நாகூரான் இராமச்சந்திரன்
இசை : எஸ்.ஜே.ஜனனி
சவுண்ட்  – ராஜேஷ் சசீந்திரன்
பாடலாசிரியர் – ரமேஷ் வைத்யா
மேனேஜர் – உசிலை சிவா
தயாரிப்பு நிறுவனம் : டிஸ்கவரி சினிமாஸ்
தயாரிப்பு : வேடியப்பன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் எலக்ட்ரீஷியன் மற்றும் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான முத்தையா (குங்குமராஜ் முத்துசாமி), அவரது மனைவி செல்லம்மா (வைரமாலா), மற்றும் அந்த கிராமத்தில் இருக்கும் பஞ்சு மில்லில் வேலை பார்க்கும் மும்பையைச் சேர்ந் சுனில் (பர்வேஸ் மெஹ்ரூ,) வீட்டின் உரிமையாளர் காது கேட்காத பாட்டியின் வீட்டில் வசிக்கின்றனர். முத்தையாவின் நண்பன் வரதன் (ரமேஷ் வைத்யா) தினந்தோறும் அவனைத் தங்கள் அன்றாட குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான். முத்தையா ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அவனது மனைவி  செல்லம்மா  அவனை மேலும் வெறுக்கிறாள். எதிர் வீட்டில் வசிக்கும் சுனில் கடின உழைப்பாளி. மேலும் செல்லம்மாவை அவர் தனது சகோதரியை போல் பாவித்து அன்புடன் பழகுகிறார். ஏற்கனவே முத்தையாவுக்கு வட இந்தியத் தொழிலாளர்கள் மீது உள்ள வெறுப்பை அவரது பக்கத்து வீட்டுக்காரரான சுனில் மீது காட்டுகிறார். தன் மனைவி தன்னிடம் பாசம் காட்டாமல் எங்கோ இருந்து வந்தவனிடம் பாசத்துடன் பழகுவது முத்தையாவுக்கு மேலும் சுனில் மீது வெறுப்பை அதிகரிக்க வைக்கிறது. இந்நிலையில் சுனில் தன் குடும்பத்தை பார்க்க போக தயாராகும் போது சுனில் ஒரு பையை   செல்லம்மாவிடம் கொடுத்து வைத்து விட்டு வெளியே செல்கிறார். புதிதாக கடை ஆரம்பிக்க  பணம் வேண்டும் என்று தன் மனைவியிடம் முத்தையா கேட்கிறார். ஏற்கனவே தனது தந்தை பணம், பைக், நிலம் கொடுத்ததை குடித்து விட்டு அழித்ததால் மீண்டும் தனது தந்தையிடம் பணம் கேட்க முடியாது என்று கூறுகிறார். அப்போது ஏற்பட்ட குடும்ப சண்டையில் செல்லம்மா வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதே நேரத்தில் வெளியே செல்லும் பர்வேஸ் மெஹ்ரூ விபத்தில் இறந்து போகிறார். மேலும் வீட்டில் சுனில் கொடுத்து வைத்திருந்த பை காணாமல் போகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

முத்தையாவாக வரும் குங்குமராஜ் முத்துசாமி படத்தின் 90 சதவீத காட்சியில் அழுக்கு சட்டையுடன், எப்போதும் மது மற்றும் பீடி புகைப்பது என சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பெருந்தியுள்ளார். படத்தின் பிற்பகுதியில் உள்ள 10 சதவீத காட்சியில் ஈர்க்கக்கூடிய நடிப்பை வழங்கியுள்ளார்.

செல்லமாக வரும் வைரமாலா குங்குமராஜ் முத்துசாமியுடன் போட்டிப்போட்டு உடல்மொழி மூலம் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி மனதில் இடம் பிடிக்கிறார்.

புலம்பெயர்ந்த தொழிலாளி சுனில் கதாபாத்திரத்தில் பர்வேஸ் மெஹ்ரூ, நகைச்சுவைக்கு குடிகாரன் மற்றும் நண்பனாக ரமேஷ் வைத்யா, மாமனாராக வரும் செந்தில் கோச்சடை, சுனிலின் மனைவி டிம்பிளாக ஷமீரா, சுனில் அப்பாவாக பிண்ட்டூ, சுனில் அம்மாவாக வந்தனா, சுனில் குழந்தையாக பேபி தனிஷா, திருப்புளயாக சுபாஷ், இன்ஸ்பெக்டராக தங்கமணி பிரபு, மில் மேனேஜராக ரமேஷ் யந்த்ரா, சுனில் நண்பனாக ராஜேஷ், கான்ஸ்டபிளாக ராமையா, அக்கவுண்டண்ட்டாக சாம் டேனியல், உட்பட அனைவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

எஸ்.ஜே.ஜனனி இசை மற்றும் பின்னணி இசையும், காட்சியுடன் ஒன்ற வைக்கும் தேனி ஈஸ்வரின் அற்புதமான ஒளிப்பதிவும், நாகூரான் இராமச்சந்திரனின் படத்தொகுப்பும் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

வேலைக்கு மாநிலம் விட்டு மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள். இங்கு வேலை பார்ப்பவர்கள் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்; மற்றும் அதனால் ஏற்படும் வெறுப்புகள், மற்றும் மன அழுத்தம் ஆகியவை மையமாக வைத்து வாழ்வியல் சார்ந்த கதையை நல்ல கதாபாத்திரம் மூலம் அழுத்தமான வசனத்துடன் எளிமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி.

மொத்தத்தில் டிஸ்கவரி சினிமாஸ் எம்.வேடியப்பன் தயாரித்துள்ள ரயில் தடம் மாறாத உணர்ச்சிப் பயணம்.