ப்ளாக்பஸ்டர் ‘அரண்மனை 4’ திரைப்படம் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது!

0
224

ப்ளாக்பஸ்டர் ‘அரண்மனை 4’ திரைப்படம் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.

திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “அரண்மனை 4” திரைப்படத்தை கண்டுகளிக்கலாம்.

சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கமர்ஷியல் எண்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார்.

அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தில், ரசிகர்களை ஒரு புதுமையான ஹாரர் பயணத்திற்கு அழைத்து சென்ற இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை குவித்து, திரையரங்குகளில் ப்ளாக்பஸ்டர் பெற்றது.

அசாமிய நாட்டுப்புறக் கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு ஆவியை அடிப்படையாகக் கொண்டு அரண்மனை 4 படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பாக் எனப்படும் நீர் ஆவியைப் பற்றியது, இது தண்ணீரில் வசிக்கும் மற்றும் அது தொடர்பு கொள்ளும் எந்த மனிதனின் வடிவத்தையும் எடுக்க முடியும். திரில்லர் மற்றும் ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா மற்றும் ராஷி கண்ணா உடன், யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க, E கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு எடிட்டிங் பணிகளை ஃபெனி ஆலிவர் மற்றும் சண்டைக்காட்சிகளை ராஜசேகர் செய்துள்ளார்.

சுந்த சி உடைய வழக்கமான கமர்ஷியல் அம்சங்களுடன், குடும்பத்தோடு பார்த்து மகிழும் இந்த ஹாரர் காமெடித் திரைப்படத்தை தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளிக்கலாம்.